இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" திரைப்பட ட்ரைலர் இதோ
#TamilCinema
Prasu
3 years ago

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் அனைத்து அம்சங்களுடன் நிறைந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரத்துள்ளது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



